ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் தை அமாவாசையை ஒட்டி 18 நாட்கள் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 11-ம் தேதியில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மயான பூஜை நடக்கிறது. 13-ம் தேதி மாலை 6 மணிக்கு சித்திரை தேர் ஓட்டமும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. 17-ம் தேதி காலை 7 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.