வேங்கைவயலில் திடீர் பரபரப்பு - சடலத்துடன் போராட்டம்

62பார்த்தது
புதுக்கோட்டை: வேங்கைவயலில் இறந்த மூதாட்டியின் சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் முதல் குற்றவாளியான காவலர் முரளி ராஜாவின் பாட்டி இன்று ஜன.30 காலை உயிரிழந்தார். இந்நிலையில், மூதாட்டியின் இறுதிசடங்கிற்கு வெளியூரில் உள்ள உறவினர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய கிராம மக்கள், மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி