உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா?
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள ஒரு கிராமத்தில் மழையே பொழிவதில்லை. சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் அமைந்துள்ள அல்-ஹதீப் கிராமம்தான் உலகில் இதுவரை மழையையே பார்க்காத ஒரு கிராமம். பொதுவாக மேகங்களுக்கு கீழ் மழை பொழியும். ஆனால் இந்த கிராமம் தரை மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் மேகங்களுக்கு மேல் அமைந்துள்ளதால் மழை பெய்வது இல்லை. இங்கு பகலில் அதிகப்படியான வெப்பமும், இரவில் அதிகப்படியான குளிரும் நிலவுகிறது.