

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்.. 31 பேர் பலி (வீடியோ)
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 பயணிகளுடன் சென்ற பேருந்து, புவென்டே டி பெலிஸ் பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.