சென்னை: திமுக கூட்டணியில் விவாதங்கள் உண்டு; விரிசல் இல்லை: முதல்வர்

77பார்த்தது
எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி. வேணுவின் பேரனும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரியின் மகனுமான கோ. ஸ்டாலின் – யுவஸ்ரீ ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவைப் பொறுத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும், மக்கள் பணியை பொறுத்தவரையில், நாம் என்றைக்கும் இருப்போம். மக்களுக்காக பாடுபடுவோம், பணியாற்றுவோம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.

அதனால்தான், ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய திமுக, இன்றைக்கு ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களுக்காக செய்திருக்கிறது. என்னென்ன உறுதிமொழிகளை தந்தோமோ, தந்த உறுதிமொழிகள் மட்டுமல்ல, தராத திட்டங்களையும், வாக்குறுதிகளையும் இன்றைக்கு அரசு செய்து கொண்டிருக்கிறது. மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு ஆட்சியாக இன்றைக்கு திமுக இருந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி