பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ. 18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படுகிறது.