தீபாவளி தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் நேற்று (அக். 23) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.