இந்தியா முழுவதிலும் சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டிலும் சிறார்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை மணிகண்டன் (28) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.