தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக். 29 தொடங்குகிறது. வரைவு வாக்காளர் பட்டியலும் அன்றைய தினம் வெளியிடப்படும் நிலையில் அதன் அடிப்படையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருத்தப் பணிகள் நடைபெறுவதையொட்டி தலைமைச் செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் இன்று (அக். 24) ஆலோசனை நடைபெறுகிறது.