ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. டானா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாம்பனில் உள்ள கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றி மீனவர்கள் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படி மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.