

நடிகர் சைஃப் அலிகான் டிஸ்சார்ஜ் ஆனார்
மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 16ம் தேதி அன்று நடிகர் சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த நபர் அவரை கத்தியால் 6 முறை குத்தினார். படுகாயமடைந்த சைஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் தாஸ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சைஃப் அலிகான் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.