சென்னை விமான நிலையம் தற்போது சுமார் 3.5 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. இதற்கு மாற்றாக இரண்டாவது விமான நிலையத்தின் தேவை இருக்கிறது. அதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் கட்டப்பட்டால் 10 கோடி பயணிகளை கையாள முடியும். ஆனால் விமான நிலையம் கட்ட 64% விவசாய நிலங்களும், 26% நீர் நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தான் மக்கள் இதை எதிர்க்கின்றனர்.