துருக்கி: ஸ்கை ரிசார்ட்டில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்த சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட் கர்தால் ஹோட்டலின் உணவகத்தில் இன்று ஜன.21 அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக ஹோட்டல் முழுவதும் பரவியது. 238 விருந்தினர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், விருந்தினர்கள் கயிறுகளை பயன்படுத்தியும், ஜன்னல்களில் இருந்து குதித்தும் தப்பிக்க முயற்சித்ததில் மொத்தம் 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 55 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.