மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழாவில், பல முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் சிஇஓக்கள் பங்கேற்றனர். இவ்விழாவில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணம் செய்துகொள்ளப் போகும் வாரென் சாஞ்செஸ் அருகே மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் நின்றிருந்தனர். அப்போது நேராக பார்த்துக் கொண்டிருந்த மார்க் சட்டென திரும்பி அருகிலிருந்த சாஞ்செஸின் மார்பகத்தை ஒரு நொடி நோட்டமிட்டார். இதன் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.