
1 ரூபாய்க்கு 1 GB டேட்டா தரும் BSNL
கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும்விதமாக சூப்பரான ரீசார்ஜ் திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் ரூ.251 என்ற விலையில் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். மொத்தமாக 251 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது வெறும் 1 ரூபாய்க்கு 1ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கிறது. இந்த அடிமட்ட விலைக்கு இப்படி டேட்டாவை அள்ளிக்கொடுக்க எந்த ஒரு தனியார் நிறுவனத்தாலும் முடியாது என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.