சீனாவில் ஒரு இளைஞன் தனக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமான ஷின்-சான் வீட்டைப் போலவே ஒரு வீட்டை உருவாக்கியுள்ளார். சீனாவைச் சேர்ந்த ஷின்-சானின் தீவிர ரசிகரான 21 வயது ஷென் என்பவர் அந்த வீட்டை புதுப்பிக்க ரூ.3.5 கோடி செலவு செய்துள்ளார். ஏறக்குறைய இந்த வீடு 100 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. தற்போது இந்த வீடு உலகம் முழுவதிலும் இருந்து அனிமேஷன் கதாபாத்திர ரசிகர்களை ஈர்க்கும் ஒரு பிரபலமான மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.