சைபர் குற்ற மோசடிகளில் இருந்து மக்களை எச்சரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன் அடிப்பதற்கு முன்பு சைபர் மோசடிகளை விளக்கி விளம்பரம் செய்கின்றன. இந்த விளம்பரமானது 20 நொடிகள் வரும். இதனால் அவசரமாக யாருக்கும் போன் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் யாருக்கேனும் போன் செய்யும்போது இந்த விளம்பரம் வரும் வேளையில், போனில் கீ பேடைத் திறந்து, அதில் # விசையை அழுத்தவும். உடனே விளம்பரக் குரல் நின்றுவிடும்.