நடிகர் காதல் சுகுமாரன் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி விட்டதாக துணை நடிகை கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை நடிகை, "3 ஆண்டுகளுக்கு முன் சுகுமாரன் என்னுடன் பழகி வந்தார். அது காதலாக பின்பு மாறியது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் குடும்பம் நடத்தினார். என்னிடம் 7 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் வாங்கியுள்ளார். இப்போது என்னை ஏமாற்றிவிட்டார்" என்று பேட்டியளித்துள்ளார்.