தெலங்கானா மாநிலம், நாராயண்பேட்டை மாவட்டத்தில் பஸ் மோதியதில் பெண் ஒருவர் பலியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அரசு பேருந்து சாலையைக் கடக்கும்போது வேகமாக ஓடிவந்த பெண் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அப்பெண் மீது பஸ் டயர் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே அப்பெண் உயிரிழந்தார். உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.