மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? என தமிழிசை பேசிய கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. வடநாடுகளில், மாட்டை வைத்து அரசியல் செய்து, ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.