ராஜபாளையம்: காவலரை தாக்கிய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே உள்ள டாஸ்மாக்கில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி விசாரணைக்காக சென்ற காவலரை தாக்கிய விவகாரத்தில் ஈடுபட்ட பால்பாண்டி பாஞ்சாலி ராஜா தர்மலிங்கம் என்ற வெள்ளையன் கருப்பசாமி முத்துராஜ் மணிகண்டன் ஆகிய ஆறு பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற குற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்காக அந்த 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மாவட்ட காவல் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில் அந்த 6 பேர் மீது நடவடிக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவை பிறப்பித்ததை அடுத்து அந்த உத்தரவின் பெயரில் அந்த ஆறு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.