*திருச்சுழி அருகே கொட்டும் மழையில் பயணிகள் நிழற்குடைனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த தமிழ்நாடு நிதி அமைச்சர்*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குருவியேந்தல் கிராமத்தில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 6. 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையினை கொட்டும் மழையில் நனைந்தபடி தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நரிக்குடியில் திமுக தெற்கு ஒன்றிய கட்சி அலுவலக கட்டிடத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருக்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ் ஆள் உயர வெட்டி வேர் மாலை அணிவித்து வரவேற்றார்.
இதில் யூனியன் சேர்மன்கள் பொன்னுத்தம்பி, காளீஸ்வரி சமையவேலு, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.