சிறுவர் பூங்கா திறப்பு குழந்தைகளுடன் விளையாடி அமைச்சர்

60பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோல்டன் நகர் பகுதியில், குழந்தைகள் விளையாடும் வகையில், ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறுவர்களுடன் சேர்ந்து திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சருக்கு மலர் கொடுத்து வரவேற்ற சிறுவர்களை ரிப்பன் வெட்ட வரும்படி அமைச்சர் அழைத்தார். இதையடுத்து சிறுவர்களுடன் சேர்ந்து அமைச்சர் ரிப்பன் வெட்டி பூங்காவைத் திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சிறுவர்கள் ஆடுவதையும் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சறுக்கி விளையாடுவதையும் பார்த்த அமைச்சர் அங்கிருந்த விளையாட்டு உபகரணமான சுற்றும் நாற்காலி ஒன்றில் சிறுவர்களை அமர வைத்து சுற்றி விட்டு விளையாடியதை ரசித்து மகிழ்ந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி