விருதுநகர்: மதுபான கடையில் திருட்டு; காவல்துறை வழக்கு பதிவு

51பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி பகுதியைச் சார்ந்தவர் முருகன் வயது 54. இவர் சிவகாசி சாலையில் உள்ள குறிஞ்சி உணவகம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். 

இதே கடையில் சூலக்கரையைச் சார்ந்த வெங்கடேஷ் மேற்பார்வையாளராகவும், கேப்பிலிங்கம் பட்டியைச் சேர்ந்த நவநீதகுமார் என்பவரும், திருமங்கலத்தைச் சேர்ந்த கோபால் என்பவரும் விற்பனையாளராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் முருகன் தனது பணிபுரியும் டாஸ்மார்க் கடையை பூட்டி விட்டுச் சென்றதாகவும், மறுநாள் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிந்ததும், அங்கு வந்து பார்த்தபோது, மேஜையில் இருந்த ரூபாய் நான்காயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய முருகன் அளித்த புகார் அடிப்படையில் அம்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி