*திருச்சுழி அருகே அனுமதி இன்றி எம்-சாண்ட் ஏற்றி சென்ற டிப்பர் லாரி புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல்; லாரி ஓட்டுனர் தப்பிய ஓடிய நிலையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்*
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி பஸ் ஸ்டாப் பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதித்ததில் அதில் அனுமதி இன்றி எம்-சாண்ட் அதிகளவு கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. லாரி ஓட்டுனர் தப்பி ஓடினார். லாரியையும் சுமார் 6 யூனிட் அளவுள்ள எம்-சாண்ட்டையும் கனிம வளம் மற்றும் சுரங்கங்கள் சட்டபிரிவு 21(4) - ன் படி அதிகாரிகள் கைப்பற்றி திருச்சுழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் துணை வட்டாட்சியர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் டிப்பர் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.