இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இந்திய அணி ஐந்தாம் நாளான இன்று (டிச. 18) தனது முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் முன்னிலையில் உள்ள சூழலில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டியானது டிராவை நோக்கி நகர்கிறது.