நாகம்மாள் புத்துக்கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

57பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு புற்று நாகசிவசத்தியம்மன் புத்துக்கோவிலில் 6-ம் ஆண்டு திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு வார காலம் காப்பு கட்டி, மாலை அணிந்து விரதம் இருந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் இன்று விநாயகர் கோவிலிலிருந்து ஏராளமான பக்தர்கள் 6 அடி முதல் 21 அடி வரை உள்ள அலகுகளை வாயில் குத்தியும், பால்குடம், அக்னிசட்டி எடுத்தும் முளைப்பாரிகளுடன் , நையாண்டி மேளம், தப்பாட்டம், சிவவாத்தியம் முழங்க சுமார் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கணக்கனேந்தல் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நாகம்மாள் கோவிலுக்கு வந்தடைந்தனர் புத்து நாகம்மன், உற்சவ சிலையான நாகம்மாள், அம்மன் போன்ற சிலைகளுக்கு சிறப்பு தீபாரதனை மற்றும் லட்சத்தீபாரதனை கட்டப்பட்டது.

இதில் சாதுக்கள், சிவனடியார்கள், நிலையூர் ஆதினம், ஜீயர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி