

திருச்சுழி: பூத் கமிட்டி தொடர்பான கலந்தாய்வு
விருதுநகர் கிழக்கு மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்கள், நகரங்களில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான பாஸ்கரன் தலைமையிலும், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் முன்னிலையிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்தல் தொடர்பான இறுதிக்கட்ட கள ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் ஏற்பாட்டில் மல்லாங்கிணறு நகர்ப்பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் குறித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர். கே. ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அதிமுக பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணிகள் குறித்து கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பாஸ்கரன் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த கள ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், மல்லாங்கிணறு நகரச் செயலாளர் அழகர்சாமி மற்றும் அதிமுக கிளைக் கழக செயலாளர்கள், அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மல்லாங்கிணறு நகரக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்