ராமநாதபுரம்: பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் ஜெயஸ்வினி என்ற சிறுமி நேற்று (டிச. 17) பள்ளி கழிப்பறைக்கு சென்ற போது உள்ளே வந்த தெருநாய் அவரை கடித்து குதறியது. இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை கூறும்போது, “இந்த பள்ளியில் பாதுகாப்பே இல்லை, நாய் கடித்தவுடன் கவனிப்பாரற்று என் மகள் கிடந்தாள்” என வேதனை தெரிவித்தார்.