விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் அய்யனார் மூர்த்தி சுச்சனேரி கிராமத்தில் செயல்படும் சோலார் நிறுவனத்தில் பொறுப்பாளராக இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த நிறுவனத்தில் கடந்த பத்தாம் தேதி இரவு 10 மணி 30 நிமிடம் அளவில் திருச்சுழியை சார்ந்த பாலமுருகன், காளிமுத்து, வீரமணி, முத்து கருப்பையா ஆகிய நான்கு நபர்களும் சோலார் பேனல்கள், 10 சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அய்யனார் மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சியில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.