விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணர் பேரூராட்சி உள்ள எட்டாவது வார்டில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து ஒரு வாரம் ஆகியும் பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தாமிரபரணி குடிநீர் வீணாக கழிவு நீர் வாய்க்காலில் செல்கிறது. ஆதலால் இப்பகுதி உள்ள மக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பேரூராட்சியில் இது சம்பந்தமாக பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவாக சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டனர்.