முடிவுற்ற வளர்ச்சி பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார்

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆத்திகுளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9. 77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை மற்றும் ஆத்திகுளம் விளக்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6. 50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை, கம்பிக்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் 9. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை மற்றும் முஷ்டகுறிச்சி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் 16. 41 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம், மற்றும் திருவிருந்தாள்புரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 16. 55 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அப்போது ஆத்திகுளம் கிராமத்தில் நியாய விலை கடையினை திறந்து வைத்த நிதியமைச்சர் மரக்கன்றுகளை நட்டு வைத்து அங்கிருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது 100 நாள் வேலை நாள் சம்பளங்களை வார வாரம் ஏற்ற சொல்லுங்க என கோரிக்கை வைத்தனர் அமைச்சர் சிரித்தபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி