திருச்சுழி - Tiruchuli

சாவி கடையில் புகுந்த 3 அடி நீளம் உள்ளகொம்பேறி மூக்கன் பாம்பு

காரியாபட்டி சாவி கடையில் புகுந்த 3 அடி நீளம் உள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு - லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி - கள்ளிக்குடி சாலையில் உள்ள சாவிக்கடை ஒன்றில் பாம்பு புகுந்து இருப்பதாக காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலைத் தொடர்ந்து காரியாபட்டி தீயணைப்புத்துறை பொறுப்பு அதிகாரி நாகராஜ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடைக்குள் புகுந்த பாம்பை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சாவி கடைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பத்திரமாக பிடித்தனர். அந்தப் பாம்பு மூன்று அடி நீளம் உள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு எனவும் தெரிய வந்தது. பாதுகாப்பாக லாவகமாக பிடித்த பாம்பை தீயணைப்புத் துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.

வீடியோஸ்

விருதுநகர்
Sep 27, 2024, 02:09 IST/திருச்சுழி
திருச்சுழி

சாவி கடையில் புகுந்த 3 அடி நீளம் உள்ளகொம்பேறி மூக்கன் பாம்பு

Sep 27, 2024, 02:09 IST