திருவண்ணாமலை திருகார்த்திகை தீபஒளி திருநாளானது வருகின்ற 13. 12. 2024 அன்று வருவதை முன்னிட்டு, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, இராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யப்பட்டு பேருந்துகள் இயக்கப்படும்.
முன்பதிவு பேருந்துகள் 12. 12. 2024 அன்று விருதுநகரில் இருந்து இரவு 08. 00 மணிக்கும், அருப்புக்கோட்டையிலிருந்து இரவு 08. 00 மணிக்கும், சிவகாசியிலிருந்து இரவு 08. 00 மணி மற்றும் 09. 00 மணிக்கும், இராஜபாளையத்திலிருந்து இரவு 08. 00 மணி மற்றும் 09. 00 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து இரவு 08. 00 மணிக்கும் புறப்படுகின்றது. முன்பதிவில்லா பேருந்துகள் 13. 12. 2024 அன்று விருதுநகரில் இருந்து காலை 07. 00 மணிக்கும், அருப்புக்கோட்டையிலிருந்து காலை 07. 00 மணிக்கும், சிவகாசியிலிருந்து காலை 07. 00 மணிக்கும், இராஜபாளையத்திலிருந்து காலை 07. 00 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 07. 00 மணிக்கும் புறப்படுகின்றது. முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளிள் கடைசி நேர கூட்ட நெரிசல்களையும் கால விரையத்தையும் தவிர்க்கும் பொருட்டு, TNSTC MOBILE APP கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.