திருச்சுழி: முன்பகை காரணமாக தாக்குதல்..மூவர் மீது வழக்கு

78பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவை சேர்ந்தவர் வைரமுத்து. இவர் கான்ட்ராக்ட் வேலை செய்து வருவதாகவும், இவர் சில வழக்குகளைச் சம்பந்தப்பட்டதன் காரணமாக நிபந்தனை ஜாமீன் பெற்று கையெழுத்திட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சுழி பகுதியில் உள்ள சுழியம்பிள்ளை கடை அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மனோஜ் குமார் அங்கிருந்த இருவரும் சேர்ந்து வைரமுத்துவை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதில் காயமடைந்த வைரமுத்து திருச்சுழி காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் திருச்சியில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி