திருச்சுழி - Tiruchuli

விருதுநகர்: திமுக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் ஆட்சிப் பொறுப்பில் ஏற்போம் - திமுக தென் மண்டல பொறுப்பாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு பேச்சு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் விருதுநகர் திமுக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தென்மண்டல திமுக பொறுப்பாளரும், தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இதில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் பவானி ராஜேந்திரன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசகன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய திராவிட மாடல் 2.0 ஆட்சி நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது தலைமையில் மீண்டும் 2026-ல் ஆட்சி பொறுப்பேற்று அனைவரும் பொறுப்பேற்போம்.  தமிழ்நாட்டில் இனி எந்த தேர்தல் வந்தாலும் திராவிட மாடல் ஆட்சிதான் பொறுப்பேற்கும் என்று பேசினார். மேலும் நாம் செய்த அனைத்து திட்டங்கள் குறித்தும் பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தினார்.

வீடியோஸ்


விருதுநகர்