முத்துராமலிங்கபுரம் பகுதியில் பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பால் பாக்கியம் தனது வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருந்த பொழுது அழகு வள்ளி மற்றும் வேலுச்சாமி ஆகிய இருவரும் தண்ணீர் வண்டியை தள்ளிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது அந்த வண்டியை பால் பாக்கியம் மீது மோத வந்ததாகவும் அதை கண்டித்ததாகவும் அதன் காரணமாக ஆக்கிரமடைந்த அழகு வள்ளி மற்றும் அவருடைய கணவர் வேலுச்சாமி ஆகிய இருவரும் சேர்ந்து பால் பாக்கியத்தை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த பால் பாக்கியம் அளித்த புகாரின் அடிப்படையில்
திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்