அய்யன் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச் சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இதனை வெள்ளி விழாவாக கொண்டாடுமாறு 28. 10. 2024 அன்று தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையிலும், நவம்பர் 12ம் தேதி அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் டிசம்பர் 23 முதல் 31ம் தேதி வரை திருவள்ளுவர் புகைப்படம் காட்சிப்படுத்தி திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்தல், திருக்குறள் விளக்க உரைகளையும், திருக்குறள் தொடர்பான புகைப்படங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
மேலும், டிசம்பர் 23ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை. இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 5000, இரண்டாம் பரிசாக ரூ. 3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2000 ரொக்கப்பரிசாக வழங்கப்படும்.