அருப்புக்கோட்டை - Aruppukkottai

விருதுநகர்: பொதுமக்களை விடாமல் பறந்து பறந்து தலையில் கொத்திய காகம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அருகே இன்று காகம் ஒன்று அவ்வழியாக சென்ற பொது மக்களை பறந்து பறந்து சென்று விடாமல் தலையில் கொத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அருகே காகம் ஒன்று அவ்வழியாக சென்ற பொது மக்களை பறந்து பறந்து சென்று எதிர்பாராத விதமாக அவர்களின் தலையில் மெதுவாக கொத்தியது. இதை அப்பகுதியைச் சேர்ந்த போட்டோகிராபர் சுந்தர் என்பவர் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது பலரும் வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் இந்த காகம் பொதுமக்களை கொத்தி வருவதாகவும் அதிலும் குறிப்பாக தனியாக நடந்து செல்வோரை மட்டுமே குறிவைத்து அந்த காகம் கொத்துவதாகவும் கூறினர். எனவே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கவனத்துடன் செல்லுமாறு சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ‌

வீடியோஸ்


விருதுநகர்