விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு குறித்த அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு குறித்தும், அந்த மாநாட்டில் செல்லும்போது நிர்வாகிகள் கவனிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், உணவு குடிநீர் உள்ளிட்ட தேவைகள் குறித்தும், எந்தெந்த வழித்தடங்களில் எத்தனை வேன்கள் செல்ல வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய மாவட்ட தலைவர் சின்னப்பர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். மாவட்ட, சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஒரே குடும்பம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நமக்குள் மனக்கசப்பு இருக்கக் கூடாது. மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மது அருந்திவிட்டு வரக்கூடாது. விருதுநகர் மத்திய மாவட்ட பகுதியில் இருந்து அறுபது வேன்கள் மாநாட்டிற்கு செல்ல வேண்டும். நம்முடைய நோக்கமே 2026 ல் விஜய்யை முதலமைச்சராக வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாநாட்டை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.