அருப்புக்கோட்டை - Aruppukkottai

விருதுநகர்: நூல் லோடு ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

பழனியில் இருந்து நூல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த வேலுச்சாமி(60) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் இன்று (நவம்பர் 8) காலை அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விருதுநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் லாரி அப்படியே சாலையின் ஒரு பகுதியில் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மறுபகுதி வழியாக திருப்பி விடப்பட்டது. ‌ அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்