விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே குடிமகன் ஒருவர் போதையில் பேருந்து, கார், லாரி செல்லும் பரபரப்பான சாலையில் படுத்துக்கிடந்து கெத்து காட்டினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை பார்த்தவாறு அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் அங்கு காவலர் ஒருவர் பைக்கில் வந்ததும் அதைப்பார்த்த குடிமகன் உடனே எழுந்து அவருக்கு வணக்கம் வைத்து சாலையில் இருந்து நகர்ந்து சென்றார். இதை அங்கிருந்த மக்கள் சிரித்தவாறு தங்களது வேலைகளை பார்த்தனர்.