உடல் முழுவதும் எரிந்து கருகி நிலையில் இளைஞர் சடலம் மீட்பு;

63பார்த்தது
*அருப்புக்கோட்டை காந்திநகர் அரசு மதுபான கடை அருகே உடல் முழுவதும் எரிந்து கருகி நிலையில் இளைஞர் சடலம் மீட்பு; தற்கொலையா என நகர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் அரசு மதுபான கடை அருகே உள்ள காட்டுப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் சடலமாக கிடப்பதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த இளைஞர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த அந்த இளைஞர் அருப்புக்கோட்டை புலவர் பூசாரி தெருவை சேர்ந்த சங்கரகுமார் என்பவரின் மகன் சதீஷ்குமார்(31) என்பதும் காந்தி நகரில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளதும் தெரியவந்தது. மேலும் சதீஷ்குமார் தொழிலில் ஏற்பட்ட கடன் பிரச்சனையாலும், காதல் தோல்வியாலும் மன விரக்தியில் இருந்ததும் இதனால் அவர் தனது உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் தந்தை சங்கரகுமார் புகாரின் பேரில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி