அருப்புக்கோட்டை - Aruppukkottai

மழைநீரோடு கலந்து தேங்கிய சாக்கடை நீர்

அருப்புக்கோட்டையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‌ இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை நகர் பகுதிகளான புளியம்பட்டி, வேலாயுதபுரம், காந்தி மைதானம், சொக்கலிங்கபுரம், நெசவாளர் காலனி, விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, ராமசாமிபுரம், பந்தல்குடி ரோடு, திருச்சுழி ரோடு, வெள்ளக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. ‌ கனமழை காரணமாக பூக்கடை பஜார், காந்தி மைதானம், விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, குமரன் புது தெரு, வேலாயுதபுரம் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் பல இடங்களில் மழை நீரோடு கலந்து சாலைகளில் சாக்கடை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் ஆங்காங்கே தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். ‌

வீடியோஸ்


விருதுநகர்
May 17, 2024, 11:05 IST/சிவகாசி
சிவகாசி

சிவகாசி: மோசடி வழக்கில் தந்தை, மகன் மீது வழக்கு பதிவு...

May 17, 2024, 11:05 IST
சிவகாசி அருகே போலியாக ஒப்பந்த ஆவணம் உருவாக்கி மோசடி செய்த தந்தை, மகன் மீது வழக்கு. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் மரியாவரப்பிரசாதம் (56). இவருக்கு சொந்தமான நிலம் நாரணாபுரம் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சிவகாசி அருகே சாமிபுரம்காலனியை சேர்ந்த பால்ராஜ், இவரது மகன் வழக்கறிஞர் முத்துக்கண்ணன் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் வாங்கியதாக கூறப்படுகின்றது. ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் மரியாவரப்பிரசாதம் பலமுறை சென்று நிலத்தை திருப்பி கேட்டுள்ளார். அவர்கள் நிலத்தை கொடுக்காமல் மோசடியாக தனது கையெழுத்தை போட்டு போலியான ஆவணத்தை தயார் செய்ததாக சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மரியாவரப்பிரசாதம் வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி பால்ராஜ் மற்றும் அவரது மகன் வழக்கறிஞர் முத்துகண்ணன் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.