அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது அவரிடம் இருந்தால் லாட்டரி சீட் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய பொருட்களை அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார். இவர் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைப் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு அருப்புக்கோட்டை சார்ந்த பாண்டியன் என்பவர் எந்தவித அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது, இதை அடுத்து அவரிடம் இருந்த 7680 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் 671 என்ற எங்க எழுதப்பட்டிருந்த லாட்டரி டிக்கெட் 119 மற்றும் 40 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் போன்றவற்றை அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து பாண்டியனை கைது செய்தனர்.