விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அதிமுக நகர செயலாளராக சோலை S. சேதுபதியை நியமனம் செய்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதேபோல நகர அம்மா பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி, அதிமுக அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சோலை S. சேதுபதி தலைமையில் நகரில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள், பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கும், அதனைத் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், கர்மவீரர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர பொருளாளர் செந்தமிழ் செல்வன், அம்மா பேரவை நகரச் செயலாளர் K. S. ராமர், அம்மா பேரவை தலைவர் சவுண்டையா, இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட துணை செயலாளர் சக்கரவர்த்தி சங்கர், கலைக்குழு மாவட்ட துணை செயலாளர் சங்கர்குமார், பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிர மணியன், மகளிர் அணி இணைச் செயலாளர்கள் பூமலர், கலைச்செல்வி, முன்னாள் அதிமுக கவுன்சிலர் ராமச்சந்திரன், தர்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்