மலைப்பட்டி பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் விஷமருத்தி தற்கொலை.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் வயது 55. இவர் கடந்த ஏழு வருடங்களாக உடல் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று பூச்சிக்கொல்லி மருந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதில் உயிர் இறந்த நிலையில், அவருடைய மகன் நடித்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.