கட்டங்குடி பகுதியில் இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பிற்கு இடையே மோதல் ஐந்து பேர் மீது தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கட்டங்குடி பகுதியில் வசித்து வருபவர் தனுஷ்கோடி இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த ராமநாதன் என்பவருக்கும் இடையே இட பிரச்சனை இருந்து
கூறப்படுகிறது. இதன் காரணமாக இருந்த முன்விரோதத்தினால் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பைச் சார்ந்த ஐந்து பேர் மீது அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.