விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் துணைத் தலைவர் மகாலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் இந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். மேலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் பள்ளி வளாகத்தில் தோட்டக்கலைத்துறை மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பார்வையிட்டார். மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களை சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கௌரவித்தார். மேலும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.