*அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ரூபாய் 2 கோடியே 18 லட்சம் மதிப்பில் புதிய வணிகவரி அலுவலகம் கட்டிடம் கட்டும் பணிக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்; 7 மாதத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்*
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ரூ 2 கோடியே 18 லட்சம் மதிப்பில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் புதிய உதவி ஆணையர்(மாநில வரி) அலுவலகத்திற்கான வணிகவரி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் கட்டிட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஏழு மாதத்திற்குள் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.